இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127:4 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6 பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? 1) பிள்ளைகளை கோபப்படுத்தக் கூடாது . பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. எபே 6:4 a) மாதிரியாய் இருக்க வேண்டும். நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,( தீத்து 2;7) உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு . 1 தீமோத்தேயு 4:12 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? ரோமர் 2:21 2 ) கர்த்தருக்கேற்ற சிட்சையில் வளர்க்க வேண்டும் . பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோ...